உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மீண்டும் எகிறும் தங்கம் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே அதிகரித்து வந்தாலும், கடந்த மாதம் 29ம் தேதி வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற புதிய உச்சத்தை எட்டியது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த நாட்களில் சவரனுக்கு ரூ.28,160 வரை அதிகரித்தது. இது திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு நகை வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் […]

தொடங்கியது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசியல் களத்தில் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, இந்த முறை 4 முனை போட்டி இருக்கும் என்று தெரிகிறது. இதில், ஆளும் திமுக தலைமையில் காங்., விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க உள்ளன. அதே போன்று, என்டிஏ […]

அண்ணாமலை விலகலின் பின்னணி?

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவருக்கு ஒதுக்கிய தேர்தல் பொறுப்பாளர் பணிகளில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதற்கு, தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தொடக்கம் முதல் இருந்து வந்த மோதலே காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், சிங்காநல்லூர், மதுரை தெற்கு, ஸ்ரீவைகுண்டம், விருகம்பாக்கம், பத்மநாபபுரம், காரைக்குடி ஆகிய 6 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி, தன்னை குறுகிய வட்டத்திற்குள் அடக்கியதால் தேர்தல் பொறுப்பாளர் பணியில் […]

ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம் – இபிஎஸ் வாக்குறுதி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோர், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1200 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக் […]

கூட்டணி ஆட்சி; காங்கிரஸ் விடாபிடி – தொகுதி பங்கீட்டில் இழுபறி

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கடந்த 2021ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், சமீப காலமாக காங். மூத்த தலைவர்களான பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ராஜேஷ்குமார் போன்றோர் இந்த கோரிக்கைகளை மேலிடத் தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள தமிழ்நாட்டில் ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி […]

தவெக.வால் அதிமுக பின்னுக்கு தள்ளப்படும்…

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தவெக அதிக வாக்குகள் பெற்று அதிமுகவை பின்னுக்கு தள்ளும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் வியூக அமைப்பாளரும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான பிரவீன் சக்ரவர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை விட தவெக அதிக வாக்குகள் பெறும். கூட்டணியின்றி தனித்து போட்டியிட்டாலும் தவெக வலுவாகவே உள்ளதாகவும் இன்றைய சூழலில் தனித்து விஜய்க்கு 18% வாக்கு உள்ளது என்று கூறியுள்ளார். […]

© NewsTimeTN. All Rights Reserved.