உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பிப். 26 விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா திருமணம்?

பிப். 26 விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா திருமணம்?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கீதா கோவிந்தம் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தானாவும் காதலித்து வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிந்துவிட்டதாகவும், இருவரது தரப்பிலும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில், அவர்களின் திருமண பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் இருவரும் பிப்.26ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திருமண பத்திரிகை, திரையுலக பிரபலங்களுக்கும், அரசியல் பிரபலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பு குடும்பத்தினர்களும், நெருங்கி உறவினர்களும் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் 4ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக திருமண பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது அதிகாரப்பூர்வ திருமண பத்திரிகையா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.