உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பிப். 26 விஜய் தேவரகொண்டா ரஷ்மிகா திருமணம்?

கீதா கோவிந்தம் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகா மந்தானாவும் காதலித்து வருவதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முடிந்துவிட்டதாகவும், இருவரது தரப்பிலும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் மோதிரம் மாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், அவர்களின் திருமண பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் இருவரும் பிப்.26ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக […]

திரிஷா பற்றிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

விஜயின் சேலம் நிர்வாகிகள் சந்திப்பு பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்; வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று பேசியிருந்தார். நயினாரின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்ணிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக எம்பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் காங்கிரஸ் எம்பி சுதா உள்ளிட்டோரும் ஒரு பெண் குறித்து அவதூறாக பேசிய நயினாருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். […]

பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: மார்ச் 2 – 26 தேதி +2 – மார்ச் 11 – ஏப்.4 10ம் வகுப்பு தேர்வுகள்

மார்ச் மாதம் தொடங்கவுள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தேர்வை 7,99,692 பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 பேர் 3,412 மையங்களில் எழுத உள்ளதாகவும், மார்ச் 3 முதல் மார்ச் 27ம் தேதி வரை நடைபெறும் 11ம் வகுப்பு […]

சபாநாயகர் பதவி நீக்க தீர்மானம் மீது மார்ச் 9 வாக்கெடுப்பு: அமைச்சர் கிரண் ரிஜிஜூ

அவையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இதில், பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து […]

நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்

தவெக தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி சேலத்தில் நடத்திய நிர்வாகிகள் சந்திப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷாவை விட்டு விஜய் வெளியே வரவேண்டும். வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் எனப் பேசியது பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்துக்கு உள்ளானது. நடிகை திரிஷா குறித்த நயினார் நாகேந்திரன் கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு பெண் குறித்து பொறுப்பில் இருக்கும் கட்சித் தலைவர் […]

டி20 போட்டியில் பாக். வீழ்த்தி 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. 10வது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் […]

கூட்டணி கட்சியினர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தவறு? – எம்.பி. மாணிக்கம் தாக்கூர்

திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், கூடுதல் தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னையில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், இது காங்கிரஸிற்கும் நன்றாகத் தெரியும் எனவும் காங்கிரஸ் உடனான கூட்டணி வலுவாக இருப்பதால் பிளவை ஏற்படுத்த சிலர் […]

© NewsTimeTN. All Rights Reserved.