உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

துருவ் விக்ரமுடன் தனுஷ் பட நாயகி காதல்?

துருவ் விக்ரமுடன் தனுஷ் பட நாயகி காதல்?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழில் தனுஷின் கொடி படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் மலையாளப் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் கடந்த 2015ல் மோலிவுட்டில் கால் பதித்தார்.

பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் உடன் அனுபமா நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இந்நிலையில், ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’ சார்பில் மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் ‘பைசன்’ படக்குழுவைச் சேர்ந்த மாரி செல்வராஜ், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை துருவ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதை ஹார்ட் சிம்பள் உடன் நடிகை அனுபமா அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.

இது ஏற்கனவே அவர்கள் இருவரும் காதலித்து வருவதாக பரவிய தகவலுக்கு கூடுதல் வலுசேர்த்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற ஜேஎஃப்டபிள்யூ விருது வழங்கும் விழாவில் அனுபமாவுக்கு துருவ் விக்ரம் பார்வையாளர்கள் மத்தியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிகழ்வின் போது, அனுபமாவிடம், நள்ளிரவு 2 மணிக்கு திரைத்துறையைச் சேர்ந்த யாருக்காவது போன் செய்ய வேண்டுமென்றால் யாருக்கு கால் செய்வீர்கள் எனக் கேட்டதற்கு, அவர் தயங்காமல் துருவ் விக்ரமுக்கு கால் செய்வேன் என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற சம்பவங்களால் இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வரும் நிலையில், இவர்கள் எடுத்துக்கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.