உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மாம்பழச் சின்னம் – உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தள்ளுபடி

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கட்சியின் தலைமைப் பொறுப்பு, கட்சியின் முக்கிய முடிவுகளில் இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அதிகார மையத்திற்கான மோதலினால் தற்போது பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக பிரிந்து ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என்று செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலைக் கருத்தில் கொண்டு, இருதரப்பும் போட்டி நியமனங்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் மூலம் தங்களுக்கே கட்சியின் அதிகாரம் […]

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் கைதாகி இரண்டு முறை சிறை சென்ற போதும், அவரால் தமிழக முதல்வராக நியமிக்கப்பட்ட நம்பிக்கைக்குரியவர் தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம். ஜெ.வின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்த அவர், ஜெ.வின் மறைவுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டார். அதிலும் குறிப்பாக ஜெ.வின் உற்ற தோழியான சசிகலா, ஓபிஎஸ்ஸை நம்பாமல் எடப்பாடியைச் சேர்ந்த பழனிசாமியை அவர் சிறை செல்லும் முன், முதல்வராக்கி அழகு பார்த்தார். ஆனால் இபிஎஸ்ஸோ நம்பிக்கை துரோகம் செய்ததுடன், […]

துருவ் விக்ரமுடன் தனுஷ் பட நாயகி காதல்?

தமிழில் தனுஷின் கொடி படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் மலையாளப் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் கடந்த 2015ல் மோலிவுட்டில் கால் பதித்தார். பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் உடன் அனுபமா நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்நிலையில், ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா’ […]

ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை களமிறக்குகிறது தவெக

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், 10 பேர் கொண்ட 6 தேர்தல் குழுக்களை அமைக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார். மேலும், ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் நபர்கள் அந்தந்த தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதையும் அவர்கள் கட்சியின் வேறு எந்த குழுவிலும் இடம் பெறக் கூடாது […]

தேமுதிக வருகையால் காங்கிரஸ் வெளியேறாது – மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் பெரும்பாலும் முடிவு எட்டப்பட்டு விட்டது. ஆனால், தேமுதிக, பாமக ராமதாஸ், தவெக, ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரின் நிலைப்பாடு என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில், நேற்று சென்னை அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதிபடுத்தினார். தற்போது மேலக் குறிப்பிட்ட இதரக்கட்சிகளின் நிலைப்பாடு தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் […]

திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எத்தனை சீட் ?

நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை கடந்த 2005ம் ஆண்டு தொடங்கி, 2006ம் ஆண்டு முதல் அக்கட்சி தேர்தலை சந்தித்து வருகிறது. திமுக-அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து வந்த தேமுதிகவில், கடந்த 2006ல் விருத்தச்சாலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, தமிழகத்தில் உள்ள பாரம்பரிய கட்சியான திமுகவை பின்னுக்கு தள்ளி, எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பிடித்தது. அதன்பிறகு, கடந்த 2016ல் மக்கள் […]

எழும்பூர் நிலைய புறநகர் ரயில் சேவை மாற்றங்கள் வெளியீடு

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவையில் செய்துள்ள மாற்றங்கள் இன்று (பிப்.20) நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், இது குறித்து தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, வழக்கம் போல் 10, 11வது நடைமேடைகளில் (புறநகர் நடைமேடைகள்) கையாளப்படும் புறநகர் ரயில்கள், 2026 பிப்.20 நள்ளிரவு 00:00 மணி முதல் […]

திமுகவில் இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இன்று (பிப்.20) முதல் மார்ச் 2ம் தேதி வரை விருப்பமனு விநியோகிக்கப்படும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் இன்று (பிப். 20) தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் தலைமைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு […]

© NewsTimeTN. All Rights Reserved.