உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

வாக்காளர் பட்டியல் – பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கும் முறை

வாக்காளர் பட்டியல் – பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கும் முறை

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தேர்தலை நடத்தும் தலைமை அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட வாரியாக இப்பட்டியலை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு முழுவதிற்குமான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7 ஆயிரத்து 617 பேரும் இருப்பதாக இறுதி வாக்காளர் பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். கடந்தாண்டு அக். 27ம் தேதி நிலவரப்படி 6 கோடியே 41 லட்சத்து வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு 5 கோடியே 43 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

18 முதல் 19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களாக பதிவு செய்தவர்களுக்கும், திருத்தங்களுக்கு விண்ணப்பித்த அல்லது தமிழ்நாட்டிற்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பு முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் வாக்காளர் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

வாக்காளர்கள், voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in ஆகிய இணையதளம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் ECI NET கைபேசி செயலி மூலமாக தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு (படிவம்-6), திருத்தத்திற்கு (படிவம்-8) அல்லது நீக்குவதற்கு (படிவம்-7) பூர்த்தி செய்து விண்ணப்பங்களை இணையவழி மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான தொடர் திருத்தக் காலம், 23.02.2026 முதல் நடைமுறையில் உள்ளது.
அதன்படி, 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்த, ஆனால் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லாத அனைத்து தகுதியுள்ள குடிமக்களும் பின்வரும் வழிகளில் விண்ணப்பிக்கலாம்:

1) வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

2) இணையம் மூலமாக https://voters.eci.gov.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

3) கூகுள் பிளே ஸ்டோரில் “Voter Helpline App” செயலியைத் தரவிறக்கம் செய்து அதன்மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

ஈரான் தாக்குதலுக்கு முன் மோடி – நெதன்யாகு ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன?

போர் பதற்றம் – இந்திய பங்குச் சந்தை 1,100 புள்ளிகள் வீழ்ச்சி

தொகுதி பங்கீட்டில் குழப்பம்: அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் இபிஎஸ்

© NewsTimeTN. All Rights Reserved.