உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் பிப்.10ம் தேதியுடன் முடிவடைந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது. இதில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்காக பிப்.10ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மறுபரிசீலனைக்காக தமிழகம் முழுவதும் முகாம்கள் மற்றும் இணையவழி மூலம் சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அதேபோல, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றபோதும் உரிய ஆவணங்கள் அளிக்காத சுமார் 12 […]

நான் விஜய் பக்கம் – பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

தேர்தல் நெருங்கும் நேரத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நெறியாளர்களின் கேள்விக்கு அரசியல் தலைவர்கள் பதிலளிக்கும் நிகழ்ச்சி சிறப்பு கவனம் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் துறை சார்ந்த வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மேடையில் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், […]

வாக்காளர் பட்டியல் – பெயர் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கும் முறை

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தேர்தலை நடத்தும் தலைமை அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட வாரியாக இப்பட்டியலை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு முழுவதிற்குமான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேரும், பெண் வாக்காளர்கள் […]

ஆட்சி அதிகாரத்தில் பங்கு – காங். பதில்

தமிழ்நாட்டிற்கு நேற்று வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து சுமார் 45 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழியும் உடன் இருந்தார். இதில், தொகுதி பங்கீடு குறித்தும், காங்கிரஸின் விருப்பத் தொகுதி பட்டியலும் வழங்கப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், தமிழக காங். மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநிலத் […]

மமகவுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக களம் இறங்கியுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக-அதிமுக-தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதேவேளை, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உடனான நிலைப்பாட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், திமுக தரப்பில் தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தை குழு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால், தங்களது தரப்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு திமுக உடனான பேச்சுவார்த்தைக்கு காத்திருப்பதாகவும் இதனால் தொண்டர்கள் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும் […]

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – வெளியுறவுத்துறைக்கு முதல்வர் கடிதம்

ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 3 விசைப்படகுகள் மற்றும் ஒரு விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 18 மீனவர்கள், 4 மீனவர்கள் என மொத்தம் 22 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இலங்கை கடற்படையினரின் தொடரும் இந்த அட்டூழியம், அத்துமீறல், மீனவர்கள், அவர்களின் குடும்பங்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களை […]

டெல்லி – மீரட் வழித்தடத்தில் அதிவேக நமோ பாரத் ரயில் சேவை தொடங்கியது

நாட்டின் முதல் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்ட அதிவேக ரயில் சேவை திட்டத்தில் சில வழித்தடங்களின் பணிகள் ஏற்கனவே நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதன் ஒருபகுதியாக, டெல்லி மற்றும் உ.பி.யின் மீரட் நகரை இணைக்கும் 82 கி.மீ. தொலைவிற்கான திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், மீரட்டில் உள்ள சதாப்தி நகர் நிலையத்தில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்து மீரட் […]

மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் தென்காசி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர் […]

திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை – ஐயூஎம்எல்.க்கு அழைப்பு

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அம்மாநிலங்களில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக, தவெக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணி நிலைப்பாட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதனிடையே, தேமுதிகவும் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கிடையே, தொகுதி பங்கீடு குறித்து திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் […]

© NewsTimeTN. All Rights Reserved.