உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

2 நாட்களில் தங்கம் விலை ரூ.1000 சரிவு

2 நாட்களில் தங்கம் விலை ரூ.1000 சரிவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடப்பாண்டின் தொடக்கம் முதல் ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜன.1ம் தேதி சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், அம்மாத இறுதியில் அதாவது ஜன.31ம் தேதி சவரனுக்கு ரூ.18,560 உயர்ந்து, சவரன் தங்கம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.

அதே போன்று, ஆண்டின் 2வது மாதமான பிப்ரவரியில் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருந்து வந்த நிலையில், பிப்.1ம் தேதி சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய் ஆக இருந்த ஆபரணத் தங்கம் விலை பிப்.28ம் தேதி, சவரன் தங்கம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மார்ச் மாதத்தின் முதல் 2 நாட்களில் தங்கம் விலை முறையே ரூ.1,800 மற்றும் ரூ.920 குறைந்து விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து கிராம் ரூ.15,650க்கும், சவரனுக்கு ரூ. 80 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 200 ஆக விற்பனையாகி வருகிறது. இதன் மூலம், கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 குறைந்து விற்பனையாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால், தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்று நினைத்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களில் ஆயிரம் ரூபாய் விலை குறைந்திருப்பது கண்டு நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.