2 நாட்களில் தங்கம் விலை ரூ.1000 சரிவு

நடப்பாண்டின் தொடக்கம் முதல் ஏற்றம் கண்டு வந்த ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜன.1ம் தேதி சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், அம்மாத இறுதியில் அதாவது ஜன.31ம் தேதி சவரனுக்கு ரூ.18,560 உயர்ந்து, சவரன் தங்கம் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. அதே போன்று, ஆண்டின் 2வது மாதமான பிப்ரவரியில் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருந்து வந்த நிலையில், பிப்.1ம் தேதி சவரன் ஒரு […]
மோடியின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது : திருமா விமர்சனம்

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. தொடக்கம் முதலே கூட்டணி மாறி பயணித்ததால் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் விசிக வெற்றி பெறவில்லை. கடந்த 2019ல் திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து கைகோர்த்த பின்னரே விசிக தொடர் வெற்றி கண்டு வருகிறது. இந்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி கோரிக்கையை திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும், விசிக […]
போர் எதிரொலி: 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,080 உயர்வு

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இது கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி விலை மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் எதிரொலித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிப். 23, 24 மற்றும் 25 தேதிகளில் சவரனுக்கு மொத்தமாக ரூ.2,000 உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, பிப்.26ல் சவரனுக்கு ரூ.80, பிப்.27ல் சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்கப்பட்டது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (பிப்.28) […]
ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவுகிறது. உலக கச்சா எண்ணெய் சந்தை விநியோகத்தில் ஈரான் முக்கியத்துவம் பெற்ற நாடாக விளங்குகிறது. அதே போல், மற்றொரு எண்ணெய் வளம் மிகுந்த நாடான வெனிசுலாவை கைப்பற்ற துடித்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்நாட்டின் அதிபர் […]
முதல்வர் வாழ்த்து செய்தியில் வெளியான திமுக-காங். விரிசல்

மத சார்பற்ற கூட்டணியில் நீடித்து வரும் திமுக-காங். இடையேயான முரண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை காங். தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இந்த சிக்கல் நீடிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் பயணிக்கும் காங். தற்போது வரை இந்த கூட்டணியில் இருந்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முன்வராத போது, திமுக […]
முதல் பாகத்தை விட ‘ஜெயிலர் 2’ சூப்பர் – மலையாள நடிகர் சுராஜ்

மலையாளத் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர்களில் சுராஜ் வெஞ்சாரமூடு ஒருவராவார். மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக வலம் வந்த அவருக்கு, சில படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர், ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25, தி கிரேட் இண்டியன் கிட்ச்சன் விக்ருதி, டிரைவிங் லைசென்ஸ், ஜன கன மன, கூத்தன்பிள்ளையுடே சிவராத்திரி உள்ளிட்ட மலையாள படங்களில் கதாநாயகனாக நடிப்பில் ஜொலித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் […]
கூட்டணி இழுபறி: பிடி கொடுக்காத காங். – கெடுபிடி காட்டும் திமுக

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் குழு தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய பேச்சுவார்த்தையில், தற்போது வரை ஐயூஎம்எல் மற்றும் மமக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன. அந்த […]
சினிமாவுல நடிக்காததுக்கு காரணம் இதுதான் – அனிருத் பேட்டி

தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்றாக பார்க்கப்பட்ட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறியுள்ளார் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு அவரது கடின உழைப்பும், புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற வெறியுமே காரணமாகும். அண்மையில் அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கும் இவரே இசை அமைக்கவுள்ளார். அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதில் உள்ள அழுத்தம் குறித்த கேள்விக்கு, எப்போதும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள […]
அயதுல்லா காமெனி கொலையைக் கண்டித்து காஷ்மீரில் 2வது நாளாக போராட்டம்

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதலாவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ஷியா பிரிவினர் வசிக்கும் பெமினா, குந்த் ஹாசிபாத், ஜஹாங்கீர் சவுக் பகுதிகளிலும், தெற்கு காஷ்மீரின் புல்வாமாவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பாதுகாப்பு […]
முதியோர், கைம்பெண்கள் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2000 வரவு

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ளன. இதனால் கட்சிகள் கூட்டணி வேலைகளிலும், பிரசாரங்களிலும் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன. மேலும், கட்சிகள் ஒன்றொடு ஒன்று போட்டிபோட்டு தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் வீசுகின்றன. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் மகளிர் உரிமைத் தொகை கணக்கில் மொத்தமாக ரூ.5,000 வரவுவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதில் பிப்., மார்ச், ஏப்., மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000, கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2000 என மொத்தம் ரூ.5000 வரவுவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, […]