உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

முதல் பாகத்தை விட ‘ஜெயிலர் 2’ சூப்பர் – மலையாள நடிகர் சுராஜ்

முதல் பாகத்தை விட ‘ஜெயிலர் 2’ சூப்பர் – மலையாள நடிகர் சுராஜ்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மலையாளத் திரையுலகில் காமெடி நடிகராக இருந்து முன்னணி நடிகராக உயர்ந்தவர்களில் சுராஜ் வெஞ்சாரமூடு ஒருவராவார். மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக வலம் வந்த அவருக்கு, சில படங்களில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர், ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25, தி கிரேட் இண்டியன் கிட்ச்சன் விக்ருதி, டிரைவிங் லைசென்ஸ், ஜன கன மன, கூத்தன்பிள்ளையுடே சிவராத்திரி உள்ளிட்ட மலையாள படங்களில் கதாநாயகனாக நடிப்பில் ஜொலித்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படைக்களம் திரைப்படமும் சூப்பர் ஹிட்டானது.

இவர் தமிழில் விக்ரம் நடித்த வீர தீர சூரன்' படத்தின் மூலம் அறிமுகமானார். இப்போது இவர் நடிப்பில் 2வது தமிழ் படமாக கென் கருணாஸ் இயக்கியுள்ளயூத்’ படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரமோஷனுக்கு வந்திருந்த சுராஜ் அளித்த பேட்டியில், தனக்கு தமிழ் சினிமா ரொம்ப பிடிக்கும், நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை. இப்போது தான் அதை நோக்கி சரியான பாதையில் செல்வதாக நினைக்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயிலர் 2 சூப்பராக வந்திருக்கிறது. முதல் பாகத்தைவிட இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது. ரஜினி சாரை பார்த்தால் போதும் என்று இருந்த எனக்கு அவரோடு நடிப்பேனா, இல்லையா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்வேன். ரஜினி சார் ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பினால் நம்மை ஆச்சர்யப்படுத்துவார். அந்த மாதிரி மாயவித்தைக்காரர் தான் ரஜினி என்று புகழாரம் சூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.