உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

போர் எதிரொலி: 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,080 உயர்வு

போர் எதிரொலி: 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.6,080 உயர்வு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கூட்டணி குறித்து பொய் பிரசாரம் – இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்

ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜூனா

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இது கச்சா எண்ணெய், தங்கம், வெள்ளி விலை மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவற்றில் எதிரொலித்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பிப். 23, 24 மற்றும் 25 தேதிகளில் சவரனுக்கு மொத்தமாக ரூ.2,000 உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, பிப்.26ல் சவரனுக்கு ரூ.80, பிப்.27ல் சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்கப்பட்டது.

வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (பிப்.28) தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.300 உயர்ந்து கிராம் ரூ.15,200க்கும், மாலையில் மீண்டும் ரூ. 350 என கிராமுக்கு மொத்தம் ரூ.650 உயர்ந்து கிராம் ரூ.15,550க்கும் விற்பனையானது.

இதனிடையே, ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,800 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,26,200க்கு, கிராமுக்கு ரூ. 225 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 15,775க்கும் விற்கப்பட்டது.

இதன் மூலம், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த 3 நாள்களில் ரூ.6,080 உயர்ந்து விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.115 குறைந்து கிராம் ரூ.15,660க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 315க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 10,000 குறைந்து 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

கூட்டணி குறித்து பொய் பிரசாரம் – இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய்

ரஜினியிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஆதவ் அர்ஜூனா

© NewsTimeTN. All Rights Reserved.