உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தந்தையானார் ஹரீஷ் கல்யாண்

தந்தையானார் ஹரீஷ் கல்யாண்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவராவார். தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். இவர் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றார்.

இவர் நடித்த `பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இவரை நாயகனாக உயர்த்தின.

மேலும் பார்க்கிங்',லப்பர் பந்து’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் குடும்பஸ்தனாக, கிரிக்கெட் ரசிகராக நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஹரிஷ் கல்யாண் கடந்த 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில், நானும் என் மனைவி நர்மதாவும் இன்று (மார்ச் 2) எங்கள் பெண் குழந்தையை வரவேற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. தாயும் மகளும் ஆரோக்கியமாகவும் நலமாகவும் உள்ளனர்.

இந்த அழகான புதிய அத்தியாயத்தை நாங்கள் ஒன்றாகத் தொடங்கும் இந்தத் தருணத்தில் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.