ஈரான் புதிய உச்ச தலைவராக அயதுல்லா மகன் மொஜ்தபா தேர்வு?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரானில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி மற்றும் அவரது மகள், மருமகன், பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான டிரம்ப்பின் அறிவிப்புக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் அரசு பின்னர் இதனை உறுதி செய்தது. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனக் கூறியதைத் தொடர்ந்து பதிலடி தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. […]
கூட்டணியை இறுதி செய்யாமல் ராமதாஸ் தாமதிப்பது ஏன்?

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் இரு முக்கிய கட்சிகளான ஆளும் திமுகவும் எதிரணியில் உள்ள அதிமுகவும் அவற்றின் தலைமையிலான கூட்டணியை ஓரளவுக்கு முடிவு செய்துள்ளன. இருப்பினும், இன்னும் சில கட்சிகள் புதிதாக தங்களது கூட்டணியில் இணைய உள்ளதாக இரு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. இதனிடையே, திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு கூட்டணி கட்சிகளுடனான முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக தலைமைக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையே […]
துபாயில் சிக்கிய 366 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை வருகை

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி, அவரது குடும்பத்தினர் மற்றும் மூத்த ராணுவத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதைத் […]
இந்தி திணிப்பு வெறியில் எல்லை மீறுகிறது பாஜக – முதல்வர் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர்ப் பலகைகளின் மையத்தில் ஆங்கிலம் பிரதானப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்தி இடம் பெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 4ம் தேதி சிவகாசி ரயில் நிலையத்தின் புதிய பெயர்ப் பலகையின் மத்தியில் இந்தி பிரதானப்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழும்பியது. திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மாநில நிதியமைச்சரும், திமுக விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்கம் தென்னரசு, எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழை அவமதித்ததாக […]
இன்று முடிவுக்கு வருமா திமுக-காங். தொகுதி பங்கீடு?

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் குழு தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் காரணமாக இழுபறி நீடித்து வந்த சூழலில், திமுக – காங். கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.28) நடைபெற்றது. இதன்போது, காங். […]
புதிய கட்சியின் பெயரை நாளை அறிவிக்கிறார் சசிகலா?

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறைக்கு செல்லும் முன் பன்னீர் செல்வத்திடம் இருந்து பறித்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியை நம்பி கட்சியையும் ஆட்சி பொறுப்பையும் விட்டுச் சென்றார். அதன் பிறகு, ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்பு குழுவை ஏற்படுத்தி கட்சியை மீட்க போராடி வந்தார். இதனிடையே, தன்னை நம்பிய சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த இபிஎஸ் முதல்வர் பதவியையும் கட்சியையும் தனதாக்கிக் கொண்டார். இதனால் […]
தந்தையானார் ஹரீஷ் கல்யாண்

தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவராவார். தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். இவர் ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மக்களின் ஆதரவைப் பெற்றார். இவர் நடித்த `பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘ஓ மணப்பெண்ணே’, ‘தாராளபிரபு’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இவரை நாயகனாக உயர்த்தின. மேலும் பார்க்கிங்’,லப்பர் பந்து’ போன்ற வித்தியாசமான கதைக்களம் […]
மார்ச் 8ல் வெளியாகும் தவெக தேர்தல் அறிக்கை?

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திமுக ஆட்சியை தக்கவைத்து கொள்ளவும் எதிரணியில் உள்ள அதிமுக ஆட்சியை பிடிக்கவும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. இதில், தமிழக அரசியலில் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும், 3வது மாற்று சக்தியாக கருதப்படும் தவெகவும் களத்தில் உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்க தவெக முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஒருபுறம் அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார். மற்றொரு […]
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,600 வீழ்ச்சி
இந்தாண்டு தொடக்கத்தில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த மாதத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த சனிக்கிழமை (பிப்.28) தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.2,400ம், மாலையில் ரூ.2,800ம் உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது. அதே போன்று வெள்ளியும் காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, பங்கு சந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருந்தும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் […]