உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

திமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் விருப்ப மனு

திமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் விருப்ப மனு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

எச்டிஎப்சி, பிஎன்பி, பந்தன் வங்கிகளில் ஏப்.1 முதல் புதிய ஏடிஎம் விதிகள்

நடிகர் சூர்யாவை பின்பற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி

அதிவேகமாக 900 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அவற்றின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

கடந்த மாத இறுதியில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் தேமுதிக இணைந்த சில நாட்களில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ், அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட கழகமான தாயகத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதல்வர் வாய்ப்பளித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, திமுகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் இருந்து விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று விருப்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை அளித்துள்ளதாகவும், போடி தொகுதியில் ஓபிஎஸ்ஸும், போடி அல்லது ஆண்டிபட்டி தொகுதியில் தானும் போட்டியிட விருப்ப மனு அளித்திருப்பதாகவும் கூறினார்.

மேலும், மதுரை திருமங்கலத்தில் நாளை நடைபெறும் இணைப்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. திமுகவில் தாங்கள் இணைந்ததற்கு மக்கள் பெரியளவில் ஆதரவளித்திருப்பதாகவும் ரவீந்திரநாத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

எச்டிஎப்சி, பிஎன்பி, பந்தன் வங்கிகளில் ஏப்.1 முதல் புதிய ஏடிஎம் விதிகள்

நடிகர் சூர்யாவை பின்பற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி

அதிவேகமாக 900 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

© NewsTimeTN. All Rights Reserved.