தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் மாற்றம் – புதிய ஆளுநர் யார்?

தமிழ்நாடு, நாகாலாந்து, மே.வங்கம் உள்பட 8 மாநிலங்களுக்கு ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மே.வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களில் போன்று இங்கும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் அவரது பதவியை நேற்று திடீரென […]
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களாக பணியாற்றும் ஊழியர்களுக்கு 2026 மார்ச் நிலவரப்படி, 15% வரை சம்பள உயர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட படிகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதிய மறுசீரமைப்புக் குழு பரிந்துரையின் பேரில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 22,804 விற்பனையாளர்கள் மற்றும் 3,216 கட்டுநர்கள் உட்பட 26,020 ஊழியர்கள் பயன் பெறுவர். திருத்தப்பட்ட கட்டமைப்பின் கீழ், புதிதாக நியமிக்கப்பட்ட […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி நியமனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலிஜியம் கடந்த வாரம் கூடிய போது, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, குடியசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா நேற்றுடன் (மார்ச் 5) ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை நியமித்து குடியரசுத் […]
திமுக சார்பில் போட்டியிட ஓபிஎஸ், அவரது மகன் விருப்ப மனு

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திராவிட கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அவற்றின் தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. கடந்த மாத இறுதியில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் தேமுதிக இணைந்த சில நாட்களில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஓபிஎஸ், அவரது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திராவிட கழகமான தாயகத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் முதல்வர் […]
தமிழகத்தில் ஜூலை 17 மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்

இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போதும் 2 கட்டங்களாக எடுக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் முதற்கட்டப் பணிகள் வரும் 2027 ஏப்.1 முதல் செப். 30 வரை நடைபெறும் என்றும் மத்திய […]
சனிப்பெயர்ச்சி – திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் குவியும் பக்தர்கள்

சனி பகவான் 12 ராசிகளிலும் தலா 2 1/2 ஆண்டுகள் சஞ்சரிக்கும் கால சுழற்சியையே ‘சனிப்பெயர்ச்சி’ என்று அழைக்கிறோம். இந்து மதத்தில், ஆன்மீக ரீதியாக குரு, ராகு-கேது மற்றும் சனிப்பெயர்ச்சி ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மற்ற கோயில்களில் நவகிரகங்களிலோ அல்லது தனி சிலையாகவோ சனி பகவான் அருள் பாலிப்பார். ஆனால், நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கென தனி சந்நிதி கொண்டு, பரிகார ஸ்தலங்களில் முதன்மை இடமாக விளங்குவது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலாகும். […]
விஜய் – திரிஷா ஒரே காரில் ஜோடியாக சென்று திருமண விழாவில் பங்கேற்பு

தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும் தவெக தலைவருமான விஜய்க்கும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட லண்டன் வாழ் தமிழ் பெண்மணியான அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்சினை ஏற்பட்டு ஒரே வீட்டில் தனித்தனியாக வசிப்பதாக தகவல்கள் வெளியாகின. சமீபத்தில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய், திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு அவரது கட்சியிலும், பொதுவெளியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. நடிகை திரிஷாவும் தனக்கும் எந்தவொரு அரசியல் […]