உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தர்மாதிகாரி நியமனம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலிஜியம் கடந்த வாரம் கூடிய போது, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, குடியசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் ஶ்ரீவஸ்தவா நேற்றுடன் (மார்ச் 5) ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நீதிபதி தர்மாதிகாரி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு முடித்து 1992ம் ஆண்டு முதல் ம.பி., உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

கடந்த 2000-2015ம் ஆண்டு வரை, வருமான வரித்துறை, வங்கித் துறை மற்றும் மத்திய அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர் 2016ம் ஆண்டு ம.பி., உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018ம் ஆண்டு ம.பி. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளா உயர்நீதிமன்றத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், இவரை புதிய தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.