உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தவெக தலைவர் விஜய் மார்ச் 15ல் ஆஜராக சிபிஐ உத்தரவு

தவெக தலைவர் விஜய் மார்ச் 15ல் ஆஜராக சிபிஐ உத்தரவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய பின்னர் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார்.

கரூரில் கடந்தாண்டு செப். 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணைக்காக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஜன.12ல் நேரில் ஆஜராகும்படி தவெக தலைவர் விஜய்க்கு கடந்த ஜன. 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, நேரில் ஆஜரான விஜயிடம் அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தனர்.

அப்போது கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன், பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஜன.19ம் தேதி மீண்டும் ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதன் போது, விஜயின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் விசாரணை முடிந்து அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.

அதே நேரத்தில், விஜய் 2வது முறையாக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய் மார்ச் 10ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த இருமுறை சம்மன் அனுப்பட்ட நிலையில், தற்போது 3வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் அலுவல்கள் மற்றும் தனிப்பட்ட பணி காரணமாக அவர் தரப்பில் விசாரணைக்கு ஆஜராக 15 நாட்கள் அவகாசம் கோரியும் இங்குள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், விசாரணைக்கு மார்ச் 15ம் தேதி ஆஜராகும்படியும், வழக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதால் அங்கு தான் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ தரப்பில் விஜய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தற்போது 3வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.