ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து பல முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
இதனிடையே, அமெரிக்கா-ஈரான் போர் சூழல் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வார தொடக்கம் முதல் இந்த வார தொடக்க நாளான மார்ச் 9ம் தேதி வரை தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
அதன்படி, கடந்த 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் 6,520 ரூபாய் வரை குறைந்தது.
இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று (மார்ச் 9) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும், ரூ.800 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 600க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து, தங்கம் விலை கடந்த 10ம் தேதி சவரனுக்கு ரூ.800, 11ம் தேதி சவரனுக்கு ரூ. 560 என மொத்தம் ரூ.1,360 உயர்ந்தது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.14,970க்கும் சவரனுக்கு ரூ.1200 குறைந்து ஒரு சவரன் ரூ.1லட்சத்து 19 ஆயிரத்து 760க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கடந்த 2 நாட்களாக எந்த மாற்றமுமின்றி கிலோ ரூ.3 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.


