உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

எரிவாயு தட்டுப்பாடு – மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவரது மனைவி, மகள், மருமகன், பேரக்குழந்தை உள்ளிட்ட குடும்பத்தினரும், ராணுவத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். மேலும், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் இன்றுடன் 13வது நாளாக நீடிக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலுக்கு ஈரானும் […]

தந்தையின் பெயரை தவிர்த்த விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்து, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட உள்ளார். இதற்கான தேர்தல் பணிகளின் ஒருபகுதியாக அவர் வேட்பாளர் நேர்காணலில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, ஏப். 20ம் தேதி […]

ஹோர்முஸ் நீரிணையை கடக்க இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதி

அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மற்றும் தூதரகங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. ஈரானையும் ஓமான் நாட்டையும் பிரிக்கும் 33 மீட்டர் குறுகிய கடல் […]

அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் துணைத் தேர்தல் ஆணையர்கள் தலைமையில் சென்ற குழு தேர்தல் நடத்துவதற்கான தயார்நிலை குறித்த ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில், இம்மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இதனிடையே, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக அதன் கூட்டணி […]

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, சீமானின் நாதக கட்சிகளும் களத்தில் உள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் நேர்காணல் ஆகியவற்றில் தீவிரம் காட்டி […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1200 சரிவு

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து பல முறை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனிடையே, அமெரிக்கா-ஈரான் போர் சூழல் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வார தொடக்கம் முதல் இந்த வார தொடக்க நாளான மார்ச் 9ம் தேதி வரை தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. அதன்படி, கடந்த 2ம் தேதி முதல் 5ம் […]

தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்கிறார் ராஜேந்திர விஸ்வநாத்

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டதைத் தொடர்ந்து விரைவில் அங்கு செல்லவுள்ளார். தமிழகத்தின் 26வது ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தாலும், தேர்தல் வரை ஆர்.என். ரவி தமிழகத்தில் ஆளுநராக தொடர வேண்டும் என்று முதல்வர் கூறி வந்த நிலையில், அவர் தற்போது மே.வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, முதல்வர் […]

© NewsTimeTN. All Rights Reserved.