உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தந்தையின் பெயரை தவிர்த்த விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்

தந்தையின் பெயரை தவிர்த்த விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் கட்சியை ஆரம்பித்து, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட உள்ளார். இதற்கான தேர்தல் பணிகளின் ஒருபகுதியாக அவர் வேட்பாளர் நேர்காணலில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு, ஏப். 20ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கணவர் விஜயின் நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதிக்கவும் கோரி சங்கீதா மற்றொரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்பட இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

இவரின் முதல் படமான சிக்மா வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இதற்கான பணிகள் முடிவடைந்துள்ளன. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார்.
‘சிக்மா’ படத்தின் டீசரில் கூட தனது பெயரை வெறுமனே ஜேசன் சஞ்சய் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஜேசன் சஞ்சய் அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.

தனது புதிய படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் கையெழுத்துகளில் தந்தையின் பெயரை குறிக்கும் எழுத்தை அவர் பயன்படுத்தவில்லை என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தற்போது தந்தை விஜயின் பெயருக்கு பதிலாக அவர் ‘ஜேசன் சஞ்சய் எஸ்’ என்ற முறையில் கையெழுத்திட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் ‘எஸ்’ என்பது அவரது தாய் சங்கீதாவின் பெயரைக் குறிப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக, ஜேசன் சஞ்சய் இன்ஸ்டாவில் தனது தந்தை விஜயை பின்தொடர்வதை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.