உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர் வெளியீடு

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ டீசர் வெளியீடு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் & சன்ஸ்’.

நடிகர் சூர்யாவின் 46வது படமான இதில் அவருடன் ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ மற்றும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மார்ச் 2ம் தேதி வெளியிடப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுபெற்ற நிலையில், வருகிற ஜூலை மாதம் உலகம் முழுவதும் வெளியிடத் தயாராகி வருகிறது.

இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. கையில் குழந்தையுடன் சூர்யா நிற்கும் போஸ்டர் மூலம் இது உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக இருக்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சூர்யாவின் கருப்பு' மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, அதன் பிறகுசூர்யா 47′ ஆகிய படங்கள் திரைக்கு வர வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.