மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உலக பங்குச் சந்தை சரிவு ஆகியவற்றின் தாக்கத்தினால் தங்கத்தின் விலை உயரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,280 வரை சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,710க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே போல், ஒரு கிராம் வெள்ளி ரூ.4 விலை குறைந்து ரூ.276க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.4,000 விலை குறைந்து 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வதை சர்வதேச முதலீட்டாளர்கள் குறைத்துள்ளதால், தங்கம் விலை குறைந்து வருவதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


