உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

நாளை விஜயின் ‘ஜன நாயகன்’ படம் பார்க்கிறதா மறு ஆய்வு குழு?

நாளை விஜயின் ‘ஜன நாயகன்’ படம் பார்க்கிறதா மறு ஆய்வு குழு?

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் திரையுலகின் உச்ச நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கிய பின்னர், தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜன நாயகன் திரைப்படமே அவரது கடைசிப் படம் என்று கூறப்படுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கேவிஎன் புரொக்டக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், மமிதா பைஜு, பிரியாமணி, பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பொங்கலையொட்டி கடந்த ஜன.9ம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக குறித்த நேரத்தில் வெளியாகவில்லை.

சென்சார் விவகாரத்தில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்தை அணுகியது படத் தயாரிப்பு நிறுவனம். மறுஆய்வு குழு படத்தைப் பார்த்து சென்சார் சான்றிதழ் வழங்கினால் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இதனிடையே, மறுஆய்வு குழு கடந்த வாரம் படத்தை பார்க்கும் என தகவல் வெளியானது. ஆனால், கடைசி நேரத்தில், அக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் அது ரத்தானது. இதனால் படத்தின் ரிலீஸ் மேலும் தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை சென்சார் போர்டின் மறு ஆய்வு குழு நாளை பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறுஆய்வுக் குழு நாளை படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் படத்தை விரைவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருகிறது. இதுவரை படம் வெளியாகாததால் ஏமாற்றம் அடைந்துள்ள விஜய் ரசிகர்கள் பட ரிலீசுக்காக பெரிதும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.