உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவான கருப்பு' மற்றும்விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரு படங்கள் அடுத்ததடுத்து வெளியாக தயாராக உள்ளன.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான `கருப்பு’ படம் கடந்தாண்டு தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது தாமதமானது. அதன் பிறகு, தற்போதுவரை ரிலீஸ் தேதி சிக்கலாகவே இருந்து வந்தது.

கருப்பு' திரைப்படத்தை வெளியிட முடியாததால், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான சூர்யாவின்விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸும் முடிவாகாமலே இருந்தது.

தற்போது இந்த சிக்கல்கள் எல்லாம் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கருப்பு' வெளியாகும் முன்விஸ்வநாத் & சன்ஸ்’ படம் வருவது பாதிப்பாக அமையும் என்பதால் சூர்யாவின் தரப்பில் விஸ்வநாத் & சன்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் பேசி இருப்பதாகவும், அதன் அடிப்படையில் முதலில்கருப்பு’ படத்தை மே மாதம் வெளியிட உள்ளதாகவும் பேச்சு எழுந்தது.

இதனிடையே, சூர்யாவின் 46வது படமான விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர் கடந்த திங்கள்கிழமை வெளியாகி உள்ளது. கையில் குழந்தையுடன் சூர்யா நிற்கும் போஸ்டர் மூலம் இது உணர்ச்சிபூர்வமான குடும்பக் கதையாக இருக்கலாம் என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அண்மையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்ஜே பாலாஜி கருப்பு படம் தேர்தல் முடிந்த பின்னர் வெளியாகும் எனக் கூறினார்.

இந்நிலையில், கருப்புப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி சூர்யா, ஆர்ஜே பாலாஜி காம்போவில் உருவாகியிருக்கும் கருப்பு படம் மே 14ம் தேதி திரையரங்கில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் கருப்பு' மே மாதம் வெளியாகும் நிலையில், ஜூலையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, அதன் பிறகுசூர்யா 47′ ஆகிய படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.