உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

விஜய் கதையில் சூர்யா, ஏஆர்ஆருக்கு பதில் சாய் அபயங்கர் – ஆர் ஜே பாலாஜி

விஜய் கதையில் சூர்யா, ஏஆர்ஆருக்கு பதில் சாய் அபயங்கர் – ஆர் ஜே பாலாஜி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில், ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு’. இப்படத்தில் திரிஷா, நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் மே 16ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், கருப்பு படம் குறித்து அண்மையில் பேட்டி அளித்த ஆர் ஜே பாலாஜி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் ‘கருப்பு’ கதையை எழுதத் தொடங்கியதாகவும், அந்தக் கதைக்கருவுக்கு மிகப்பெரிய நட்சத்திரம் தேவை என்ற சூழலில், விஜய் சாராக இருந்தால் அற்புதமாக இருக்கும் என்று நினைத்ததாகவும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே 2021-22ம் ஆண்டின் போது விஜய் தன்னிடம், எல்.கே.ஜி அல்லது மூக்குத்தி அம்மன் போன்ற பாணியில் சட்டையர் படம், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய மென்மையான சுவாரஸ்யமான கதை வேண்டும் என்று கேட்டு, அவரிடம் ஒரு கதையை விவரித்த போது, அதை உடனடியாகச் செய்ய முடியுமா என்று விஜய் கேட்டதாகவும், சுமார் 14 மாதங்களாகும் என்று கூறியதால் அந்த வாய்ப்பு கைவிட்டு போனதாகவும் ஆர்.ஜே. பாலாஜி அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், விஜய்க்கு கதைக்கரு பிடித்திருந்தது தனக்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும், பின்னர் அந்த கதையை சூர்யாவுக்கு சொல்லி அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்குப் பொருந்தும் வகையில் சில மாற்றங்களைச் செய்ததாகவும் விளக்கம் அளித்த ஆர்.ஜே. பாலாஜி, இது முற்றிலும் வேறுபட்ட படம் என்றார்.

மேலும், ஏ ஆர் ரஹ்மான் போன்ற பெரிய இசையமைப்பாளர் விலகியதால், அடுத்த தேர்வும் அதே தரத்தில் உள்ள ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டு, தயாரிப்புக் குழுவிடமும் சூர்யாவிடமும் சாய் அபயங்கரின் அபரிமிதமான ஆற்றலை பற்றி சொன்னேன்.

இது சாயின் முதல் பெரிய பட்ஜெட் படம். அவர் தற்போது இதுபோன்ற பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்கே உரிய இசையமைப்பாளர்கள் உண்டு. அடுத்த தலைமுறை அவருடைய இசையை இன்னும் அதிகமாகக் கேட்கும் என்று நினைப்பதாக ஆர் ஜே பாலாஜி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.