உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

விஜய் கதையில் சூர்யா, ஏஆர்ஆருக்கு பதில் சாய் அபயங்கர் – ஆர் ஜே பாலாஜி

தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில், ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு’. இப்படத்தில் திரிஷா, நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் மே 16ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், கருப்பு படம் குறித்து அண்மையில் பேட்டி அளித்த ஆர் ஜே பாலாஜி, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் ‘கருப்பு’ கதையை எழுதத் தொடங்கியதாகவும், அந்தக் கதைக்கருவுக்கு மிகப்பெரிய நட்சத்திரம் தேவை என்ற சூழலில், […]

திமுக கூட்டணி 44.9% வாக்குகளுடன் 180 தொகுதிகளில் வெற்றி பெறும் – ஏஎன்எஸ் கருத்துக்கணிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் ஏப்.23ம் தேதி மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளும், தேர்தல் தயாரிப்பு பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த தேர்தலில் […]

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1800 புள்ளிகள் வீழ்ச்சி

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளின் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக போர் சூழல் நிலவுகிறது. இதன் ஒருபகுதியாக, உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான […]

உள்நாட்டு விமானக் கட்டணங்களுக்கான உச்ச வரம்பு இன்று முதல் நீக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்.28ம் தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கா, இஸ்ரேல் தூதரகங்கள் மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளின் மீது ஈரான் வெறித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நிலவும் போர் சூழலால், ஈரான் […]

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.5,360 சரிவு

மார்ச் மாதத் தொடக்கத்தில் இருந்து 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்த போதிலும், கடந்த ஒரு வாரமாக சரிவடைந்து வந்தது. கடந்த வாரத்தில் மார்ச் 16ம் தேதி முதல் 21ம் தேதி சனிக்கிழமை வரை (மார்ச் 20 தவிர்த்து) தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.10,640 குறைந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,360 சரிவடைந்துள்ளது. இதனால், இன்று சென்னையில் 22 காரட் தங்கம் […]

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26 வரை அவகாசம்: தேர்தல் ஆணையம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26 வரை அவகாசம்: தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்த எஸ்ஐஆர் பணிகள் கடந்த பிப்.10ம் தேதியுடன் முடிவடைந்தன. வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19ம் தேதி வெளியானது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிச.19 முதல் பிப்.10ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட் டது. அதன்படி, பட்டியலில் பெயர் சேர்க்க […]

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை – பியூஷ் கோயல் இன்று தமிழகம் வருகை

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மந்தமாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைத்து அதில் தொகுதி பங்கீடு, அது தொடர்பான ஒப்பந்தம் என தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதே நேரம், அதிமுகவை பொறுத்தவரை இன்னும் எந்த கூட்டணி கட்சிக்கும் தொகுதிகளை பிரித்து கொடுக்கவில்லை. விரைவில் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் […]

திமுக கூட்டணியில் தான் தேர்தலை சந்திப்போம்: சிபிஎம் மாநில செயலாளர்

தமிழகத்தில் ஏப்.23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கட்சிகள் அவற்றின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் ஆகிய களப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியை பொறுத்தவரை, இதுவரை காங்கிரஸ் 28 தொகுதிகள், சிபிஐ 5, மதிமுக 4, ஐயூஎம்எல், மமக, கொமதேக ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிபிஎம், […]

© NewsTimeTN. All Rights Reserved.