உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் புதிய மாற்றம் – ஏப்.1 முதல் அமல்

ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் புதிய மாற்றம் – ஏப்.1 முதல் அமல்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப தரப்படமாட்டாது.

இந்திய ரயில்வே வரும் ஏப்.1 முதல் பயண விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இதன்படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரத்து செய்யாவிடில் ரீஃபண்ட் கிடைக்காது.

இதுகுறித்து, இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், தற்போது முன்பதிவு செய்த உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்னதாக கேன்சல் செய்தால் ரத்து கட்டணம் போக மீதத் தொகை கிடைக்கும். இந்த காலக்கெடு வரும் ஏப்.1ம் தேதி முதல், 8 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

எட்டு முதல் 24 மணிநேரத்திற்குள் ரத்து செய்தால் 50%, 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 25% கட்டணமும் பிடித்தம் செய்யப்படும். அதுவே, 72 மணி நேரத்திற்கு முன்னதாக என்றால், குறைந்தபட்ச ரத்து கட்டணம் போக, தற்போதைய நடைமுறைப்படி முழு கட்டணம் திரும்பக் கிடைக்கும்.

இந்த மாற்றம் மூலம், கடைசி நேரத்தில் டிக்கெட் ரத்து செய்யப்படுவதை குறைக்க முடியும். மற்ற பயணிகளுக்கு இருக்கை மற்றும் படுக்கை வசதி கிடைப்பதை மேம்படுத்தும்.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப தரப்படமாட்டாது.

ரயில்களின் சார்ட் தற்போது 4 மணி நேரத்துக்கு முன்பாக தயாரிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வரும் ஏப்.1ம் தேதி முதல், பயணிகளின் வசதிக்காக, ரயில் புறப்படுவதற்கு 9 முதல் 18 மணி நேரத்திற்கு முன்பாகவே முன்கூட்டியே தயாரிக்கப்படும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பு வரை, பயணிகள் தாங்கள் பயணிக்கும் வகுப்பை உயர்த்திக் கொள்ளவும், ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளவும் புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு கவுண்டர் டிக்கெட்டுகளை எந்தவொரு ரயில் நிலையத்தின் கவுன்ட்டரிலும் ரத்து செய்து கொள்ளலாம்.

இந்த புதிய மாற்றங்கள் ஏப்.1 முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.