பாமக போட்டியிடும் 18 தொகுதி உத்தேச பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதுவரை தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் மந்தமாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைத்து அதில் தொகுதி பங்கீடு, அது தொடர்பான ஒப்பந்தம் என தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதே நேரம், தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் […]
சிறிது தாமதத்துக்கு 5 முறை சாரி கேட்டார் ரஜினி – அஷ்வத் மாரிமுத்து

தமிழ் திரையுலகில் ஓ மை கடவுளே’,டிராகன்’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர் தற்போது ஏஜிஎஸ் தயாரிப்பில் சிம்பு #51 நடிப்பில் அதிரடி காதல் படம் ஒன்றை இயக்க உள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிபி இயக்கவுள்ள தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு முன்பு அஷ்வத்துக்கு தான் கிடைக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் கிடைக்கவில்லை. அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அஷ்வத் இது குறித்து கூறுகையில், டிராகன் […]
ரயில் டிக்கெட் ரத்து விதிகளில் புதிய மாற்றம் – ஏப்.1 முதல் அமல்

புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப தரப்படமாட்டாது. இந்திய ரயில்வே வரும் ஏப்.1 முதல் பயண விதிமுறைகளில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இதன்படி, உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாகவே ரத்து செய்யாவிடில் ரீஃபண்ட் கிடைக்காது. இதுகுறித்து, இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், தற்போது முன்பதிவு செய்த உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரம் முன்னதாக கேன்சல் செய்தால் ரத்து […]
திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக, திமுக தலைமையிலானக் கூட்டணியில் தேமுதிக கடந்த பிப்.19ம் தேதி இணைந்துள்ளது. சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் சென்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு, சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைமை அதனை […]
அரசியல் தொழில் அல்ல, கடமை – மநீம தலைவர் கமல்ஹாசன்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு மே 4ம் தேதி முடிவுகள் அறவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த 15ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் உள்ளிட்ட தேர்தல் பணிகள் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியிலும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியிலும் சூடு பிடித்தன. அதன்படி, திமுக தொகுதி பங்கீடு குழு நடத்திய பேச்சுவார்த்தையில் காங்., 28 தொகுதிகளும், சிபிஎம் 5, சிபிஐ 5, […]
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு – முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி வரும் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி அறிவித்தது. தேர்தல் நடக்க இன்னும் சில வாரங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த தொகுதிப்பங்கீடு நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. அதே நேரம், ஒருவேளையும் நடக்காதது போல் […]
என்டிஏகூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் – தாமரை சின்னத்தில் போட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, மே மாதம் 4ம் தேதி இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் உள்ளிட்ட துரிதப் பணிகளினால் தேர்தல் களம் அனல் தெறிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில், பாஜ கூடுதல் தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுத்ததால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறி நிலை நீடித்து வந்தது. இதைத் தொடர்ந்து, இபிஎஸ், டிடிவி […]