சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, சென்னையில் தங்கத்தின் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,670க்கும் விற்கப்பட்ட நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.2,560 குறைந்து, சவரன் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800க்கும் கிராமுக்கு ரூ.320 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,350க்கும் விற்பனையானது.
இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து79 ஆயிரத்து 440க்கும் கிராமுக்கு ரூ. 80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,430க்கும் விற்கப்படுகிறது.
அதே நேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
