தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, இதற்கான முடிவுகள் மே மாதம் 4ம் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாதக மற்றும் ராமதாஸ்-சசிகலா கூட்டணி என 5 முனைப்போட்டி நிலவுகிறது.
இதனையொட்டி, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் கையெழுத்தாவது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இத்தேர்தலில் அதிமுக 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதன்படி, கும்மிடிப்பூண்டி ஏ. சுதாகர், பொன்னேரி (தனி) சிறுணியம் ஞ. பலராமன், திருத்தணி கோ. அரி, ஆ.ஹ., திருவள்ளூர் பி.வி. ரமணா, மாதவரம் ஏ. மூர்த்தி, திருவொற்றியூர் குப்பன், ஸ்ரீபெரும்புதூர் (தனி) மு. பழனி, தாம்பரம் சிட்லபாக்கம் ச. இராஜேந்திரன், செங்கல்பட்டு ஆ. கஜா (எ) கஜேந்திரன், செய்யூர் (தனி) ராஜசேகர், மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல், காஞ்சிபுரம் ஏ. சோமசுந்தரம், அரக்கோணம் (தனி) சு. ரவி, காட்பாடி ஏ. ராமு போட்டியிடுகின்றனர்.
ஆற்காடு எஸ்.எம். சுகுமார், வேலூர் எஸ்.ஆர்.கே. அப்பு, அணைக்கட்டு த. வேலழகன், குடியாத்தம் (தனி) பரிதா புருஷோத்தமன், வாணியம்பாடி ஜி. செந்தில்குமார், ஆம்பூர் ஆர். வெங்கடேசன், ஊத்தங்கரை (தனி) டி.எம். தமிழ்செல்வம், பர்கூர் இ.சி. கோவிந்தராஜன், கிருஷ்ணகிரி கே. அசோக்குமார், ஓசூர் பி. பாலகிருஷ்ண ரெட்டி, பாப்பிரெட்டிபட்டி மரகதம் வெற்றிவேல் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
அரூர் (தனி) வி. சம்பத்குமார், செங்கம் (தனி) டி.எஸ். வேலு, கீழ்பென்னாத்தூர் எஸ். இராமச்சந்திரன், ஆரணி ஜெயசுதா, செய்யார் முக்கூர் சுப்பிரமணியன், வந்தவாசி (தனி) ராணி, திண்டிவனம் (தனி) அர்ஜூனன், வானூர் (தனி) முருகன், விழுப்புரம் விஜயா, திருக்கோவிலூர் பழனிசாமி, உளுந்தூர்பேட்டை குமரகுரு, சங்கராபுரம் சு. ராகேஷ், கள்ளக்குறிச்சி (தனி) ராஜீவ் காந்தி, கங்கவல்லி (தனி) நல்லதம்பி, ஆத்தூர் (தனி) ஜெயசங்கரன், ஏற்காடு உஷாராணி, ஓமலூர் மணி, மேட்டூர் வெங்கடாசலம், சங்ககிரி வெற்றிவேல் பெயர்கள் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
மேலும், சேலம் (தெற்கு) வினோத், வீரபாண்டி பாலாஜி சுகுமார், சேந்தமங்கலம் சந்திரசேகரன், நாமக்கல் பி.எஸ். மோகன், பரமத்தி வேலூர் சேகர், திருச்செங்கோடு சந்திரசேகர், ஈரோடு (கிழக்கு) மனோகரன், தாராபுரம் (தனி) சத்தியபாமா, காங்கயம் நடராஜ், பெருந்துறை ஜெயக்குமார், அந்தியூர் ஹரிபாஸ்கர், கோபிச்செட்டிப்பாளையம் பிரபு, பவானிசாகர் (தனி) பண்ணாரி, கூடலூர் (தனி) பொன். ஜெயசீலன், குன்னூர் ராமு, மேட்டுப்பாளையம் சின்னராஜ், திருப்பூர் (வடக்கு) ஆனந்தன், பல்லடம் பரமசிவம், சூலூர் கந்தசாமி, கவுண்டம்பாளையம் அருண்குமார், கோயம்புத்தூர் தெற்கு அம்மன் மு. அர்ச்சுணன், சிங்காநல்லூர் ஜெயராம் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர, பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை (தனி) லட்சுமண சிங், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், பழனி ரவி மனோகரன், ஆத்தூர் விஸ்வநாதன், நிலக்கோட்டை (தனி) தேன்மொழி, வேடசந்தூர் பரமசிவம், அரவக்குறிச்சி செல்வக்குமார், கிருஷ்ணராயபுரம் (தனி) திவ்யா, குளித்தலை கருணாகரன், மணப்பாறை விஜயகுமார், ஸ்ரீரங்கம் மனோகரன், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ராஜசேகரன், திருவெறும்பூர் குமார், லால்குடி லீமா ரோஸ், முசிறி யோகநாதன், துறையூர் (தனி) சரோஜா, பெரம்பலூர் (தனி) இளம்பை தமிழ்ச்செல்வன், நெய்வேலி சொரத்தூர் ராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.
பண்ருட்டி மோகன், கடலூர் சம்பத், குறிஞ்சிப்பாடி புவனேந்திரன், புவனகிரி அருண்மொழிதேவன், சிதம்பரம் பாண்டியன், சீர்காழி (தனி) சக்தி, பூம்புகார் பவுன்ராஜ், நாகப்பட்டினம் தங்க. கதிரவன், திருத்துறைப்பூண்டி பாலதண்டாயுதம், திருவிடைமருதூர் (தனி) இளமதி சுப்பிரமணியன், பாபநாசம் சண்முக பிரபு, ஒரத்தநாடு சேகர், பட்டுக்கோட்டை சேகர், பேராவூரணி கோவி. இளங்கோ, திருமயம் வைரமுத்து, சிவகங்கை செந்தில்நாதன், மேலூர் பெரியபுள்ளான் (எ) செல்வம், மதுரை கிழக்கு மாங்குளம் மகேந்திரன், சோழவந்தான் (தனி) மாணிக்கம், மதுரை வடக்கு ஞ. சரவணன், உசிலம்பட்டி மகேந்திரன் போட்டியிட உள்ளனர்.
மேலும், ஆண்டிபட்டி லோகிராஜன், போடிநாயக்கனூர், கம்பம் ஜக்கையன், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) சந்திரபிரபா, விருதுநகர் கணேசன், அருப்புக்கோட்டை சேதுபதி, பரமக்குடி (தனி) முத்தையா, திருவாடானை கீர்த்திகா முனியசாமி, முதுகுளத்தூர் மலேசியா பாண்டி, விளாத்திகுளம் சத்யா, தூத்துக்குடி செல்லப்பாண்டியன் ஆகியோர் 2கட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன், சங்கரன்கோவில் (தனி) திலிபன் ஜெய்சங்கர், கடையநல்லூர் கிருஷ்ணமுரளி, தென்காசி செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் பிரபாகரன், திருநெல்வேலி தச்சை சூ. கணேசராஜா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா (எ) இ. சுப்பையா, பாளையங்கோட்டை சையது சுல்தான் சம்சுதீன், கன்னியாகுமரி தளவாய் சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 16 சிட்டிங் எம்எல்ஏக்கள் உள்பட 20 முன்னாள் அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ம் கட்ட பட்டியலில் 20 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
அதிமுக இதுவரை வெளியிட்டுள்ள 150 வேட்பாளர்களில் 17 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள் ஆவர். இது தவிர, சென்னையில் ராயபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிடும் நிலையில், சென்னையில் உள்ள மற்ற 12 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
