உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறை வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறை வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி வான்கெடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. குறிப்பாக, ரஹானே 67 ரன்களும், ரகுவன்ஷி 51 ரன்களும் குவித்தனர்.

ரிங்கு சிங் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே அதிரடி காட்டியது.

ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன் இருவரும் அரை சதம் கடந்த நிலையில், ரோகித் சர்மா 78 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் 16 ரன்களில் பெவிலியன் திரும்ப, ரிக்கல்டன் சிறப்பாக ஆடி 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம், 2012ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது தொடர்ந்து 13 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், ஐபிஎல் சீசனின் தொடரின் ஓப்பனிங் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.