உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பாமகவில் மீதமுள்ள 15 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பாமகவில் மீதமுள்ள 15 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு, தொகுதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் முடிவு பெற்று கட்சிகள் அவற்றின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

தேர்தல் பணிகள் எதிலும் ஈடுபடாதது போன்று இருந்த அதிமுக தலைமையிலான கூட்டணியில், கடந்த வாரத்தில், டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து, தமிழக என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இபிஎஸ் முன்னிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், பாமவுக்கு சேலம் தெற்கு, விக்கிரவாண்டி, சோளிங்கர், தருமபுரி, பென்னாகரம், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், ரிஷிவந்தியம், கீழ்வேளூர், பெரம்பூர், செஞ்சி, காட்டுமன்னார்கோவில், சேலம் வடக்கு, அம்பத்தூர், விருத்தாச்சலம் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி கடந்த 26ம் தேதி வெளியிட்டார்.

அதன்படி, கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் ராவணன், அம்பத்தூர் தொகுதியில் சேகர், செஞ்சி தொகுதியில் கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

மேலும், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் என அன்புமணி கூறியிருந்த நிலையில், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இன்று அவர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தருமபுரியில் சௌமியா அன்புமணி, பெரம்பூரில் திலகபாமா, விருத்தாசலத்தில் மருத்துவர் தமிழரசி ஆதிமூலம், சேலம் மேற்கில் முன்னாள் எம்எல்ஏ கார்த்தி, பென்னாகரத்தில் பாடி செல்வம், போளூரில் பாஸ்கரன், திருப்போரூரில் வழக்கறிஞர் பாலு, ஜெயங்கொண்டத்தில் வைத்தி, சேலம் வடக்கில் சதாசிவம் போட்டியிட உள்ளனர்.

மேலும், விக்கிரவாண்டியில் சிவக்குமார், சோளிங்கரில் வழக்கறிஞர் சரவணன், மயிலாடுதுறையில் சித்தமல்லி பழனிச்சாமி, உத்திரமேரூரில் மகேஷ்குமார், ரிஷிவந்தியத்தில்செழியன், காட்டுமன்னார் கோயில் (தனி) தொகுதியில் மருத்துவர் அன்பு. சோழன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.