சர்வதேச சந்தை செயல்பாடுகளின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படை தாக்குதலினால், மேற்கு ஆசிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக தங்கம் விலையில் நிலையற்றத்தன்மை நிலவுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் (மார்ச் 28, 29) முறையே ரூ.640, ரூ.1,840 என மொத்தம் ரூ.2,480 உயர்ந்த நிலையில், இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 800க்கும் கிராமுக்கு ரூ. 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,600க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று மாலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து கிராம் ரூ.13,770க்கு விற்பனையாகிறது.
அதே போல், சில்லறை விற்பனையில் இன்று காலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்கப்பட்ட நிலையில், மாலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.


