உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் 2026 போட்டிகள் இரண்டு கட்டமாக நடக்கும் நிலையில், முதல் போட்டியில் ஐதராபாத்தை நடப்பு சாம்பியன் ஆர்சிபி அணி வென்று வாகை சூடியது. நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 221 ரன்களை சேஸ் செய்து மும்பை இந்தியன்ஸ் சாதனை படைத்தது.

இந்நிலையில் நேற்று கவுகாத்தியில் நடந்த 3வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொண்டது.

சிஎஸ்கேயின் நட்சத்திர வீரர் தோனிக்கு காயம் காரணமாக 2 வாரங்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் மைண்ட் இல்லாமல் சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. அதே நேரம், புதுமுக வீரர்களாக மேத்யூ ஷார்ட், கார்த்திக் சர்மா, மேட் ஹென்றி இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், டாஸ் வென்ற ஆர்ஆர் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கேவில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் (47), கார்த்திக் சர்மா (18), சர்பாஸ் கான் (17) ரன்கள் எடுத்தனர்.

இதனால் சிஎஸ்கே அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதையடுத்து 128 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்ஆர் அணியில் ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடி 38,52 ரன்கள் குவித்தனர். சூர்யவன்ஷிக்கு பின்னர் விளையாடிய துருவ் ஜூரெல் (18), ரியான் பராக் (14) ரன்கள் எடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால், ரியான் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆட்டத்தின் இறுதியில், 12.1 ஓவர்கள் முடிவில், 47 பந்துகள் மீதமிருந்த நிலையில், 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 128 ரன்கள் எடுத்து ஆர்ஆர் அணி இலக்கை எளிதில் எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

சிஎஸ்கே அணியில் சிறந்த ஃபார்மில் இருக்கும், பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட உர்வில் பட்டேல் பிளேயிங் 11 மற்றும் இம்பேக்ட் வீரர்கள் என இரண்டிலும் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.