உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சுராஜ் வெஞ்சாரமூடுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய சிம்பு

சுராஜ் வெஞ்சாரமூடுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய சிம்பு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியராக வலம் வருகிறார்.

இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்ததுடன், நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் `யூத்’. இதில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, நளினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படம் கடந்த 19ம் தேதி திரையரங்குளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை பார்த்த திரைபிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் கென் சிம்பு ரசிகராக நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு “யூத் படம் நல்ல அனுபவத்தை கொடுத்தது; அதற்கு இயக்குநர் கென்னுக்கு நன்றி. லவ் யூ ப்ரோ.

அவர் கதை சொல்லும் போது அவரிடம் பெரிய ஃபயர் இருந்தது. அந்த ஃபயர் தான் அவரது வெற்றி. இது மட்டுமல்ல இதை விட இன்னும் உயரத்துக்கு நீ போவாய். இப்போ நான் உங்களுடைய ரசிகனாகி விட்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இதைவிட பெரிய புரொடியூசராகி விடுவார். வாழ்த்துகள் கருப்பையா பிரதர்.

என்னுடன் பணியாற்றிய நளினி மேடம், தேவதர்ஷினி மேடம் எல்லோருக்கும் நன்றி. அவருடைய நடிப்புக்கு நான் ரசிகர். படப்பிடிப்பில் எனக்கு ஏதாவது டயலாக் இருக்கும் நாளில் உங்களுடன் சரியாக பேசி இருக்க மாட்டேன். அதற்கு காரணம் எனக்கு வசனம் மறக்க கூடாது என்பதால் தான் என்று நகைச்சுவைபடக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மலையாளத்தில் படம் நடிக்கும் போது என்னடா வசனத்தை வேகமாக கொடு என கேட்பேன். இங்கு வசனம் கொடுக்கும் போது `என்னடா நாளைக்கே படம் ரிலீஸ் பண்ண போறியா, கொஞ்சம் டைம் கொடுடா’ என்பேன். அந்த டென்ஷனில் தான் பேசி இருக்க மாட்டேன். மற்றபடி அவர் நடிக்கும் போதும் சாதாரணமாக பேசும் போதும் ஜாலி தான்.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெரிய ஹீரோ போன் செய்தார். அது வேறு யாரும் இல்லை சிலம்பரசன் சார் தான். இந்தப் படத்தை மிகவும் பாராட்டி பேசினார். சிலம்பரசன் சாருக்கும், இந்தப் படத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று உணர்ச்சிவசப்படக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.