சுராஜ் வெஞ்சாரமூடுவை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய சிம்பு

நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் பாடலாசிரியராக வலம் வருகிறார். இவர் தமிழில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது கதாபாத்திரம் மிக சிறப்பாக அமைந்ததுடன், நல்ல நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கென் கருணாஸ் நாயகனாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள படம் `யூத்’. இதில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, நளினி உள்ளிட்ட பலரும் […]
எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான எச்பிசிஎல், ஐஓசி, பிபிசிஎல் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து வருகின்றன. இதில், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பெரும்பாலும் மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதனிடையே, மத்திய கிழக்கு நாடுகளில் […]
கோழிக்கோட்டில் இன்று ராகுல் பிரசாரம்

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 9ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்திற்காக 2 நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார். அதன்படி, முதல் நாளான நேற்று பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய […]
திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்.2ம் தேதி விஜய் வேட்புமனு தாக்கல்?

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இது வரும் 6ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் கலை கல்லூரியில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் அங்கிருந்து ஊர்வலமாகசென்று கொடுங்கையூரில் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பிரசாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே 1.05 மணியளவில் தனது பிரசாரத்தை […]
வைரலாகும் பிரியாணி சமைக்கும் அஜித் வீடியோ

தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவராவார். சமீபகாலமாக, இவர் திரைப்படத்தில் நடிக்க காட்டும் ஆர்வத்தை விட கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெறவுள்ள கார் பந்தய போட்டியில் கலந்து கொள்ள அஜித் குமார் தயாராகி வரும் நிலையில், அந்த ரேசில் வெற்றி பெற வேண்டி அவரது நண்பர் கார்த்திகேயன் மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு செய்து அஜித்துக்கு ருத்ராக்ஷ மாலை வழங்கினார். நடிகர் அஜித் […]
இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமல் – கார், வேனுக்கு ரூ.10 – ரூ.40 வரை அதிகரிப்பு

நாடு முழுவதும் 1992ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதமும் 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதமும் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்குவருவது வழக்கமாகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 66 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 7% வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதிலும் குறிப்பாக, ஸ்ரீபெரும்புத்தூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை, […]
மக்கள்தொகை கணக்கெடுப்பில் லிவ்-இன் உறவு ஜோடிகள் திருமணமான தம்பதிகளாக பதிவு – மத்திய அரசு

மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, லிவ்-இன் உறவில் இருக்கும் ஜோடிகள் திருமணமான தம்பதிகளாக பதிவு செய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போதும் 2 கட்டங்களாக எடுக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் 2 […]
தமிழில் சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன் – கயாடு லோஹர்

தமிழில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான `டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பை பெற்றவர் கயாடு லோஹர். தற்போது இவர் டொவினோ தாமஸ் நடித்துள்ள பான் இந்தியா படம் `பள்ளிச்சட்டம்பி’யில் நடித்துள்ளார். இதன் மலையாள டீசர் கடந்த 26ம் தேதி வெளியானது. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஏப்.9ம் தேதி வெளியாகிறது. இதற்கான செய்தியாளர் சந்திப்பில் கயாடு கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தமிழில் பேச இன்னும் கற்றுக் கொள்ளவில்லையா […]
சென்னையில் 35°செல்சியஸ் வெயில் – சென்னை வானிலை மையம்

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். சென்னையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், […]