உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தமிழக பாஜக மையக் குழு உறுப்பினர்களுடன் மோடி ஆலோசனை

தமிழக பாஜக மையக் குழு உறுப்பினர்களுடன் மோடி ஆலோசனை

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் நிலவரம் சூடுபிடித்து, அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு, ஒப்பந்தம் ஆகியவை கையெழுத்தானது.

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ மதிமுக உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வேல்முருகனின் தவாக கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.

அதே போல், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் 14க்கும் மேற்பட்ட கட்சிகள் சேர்ந்துள்ளன. கேட்ட தொகுதிகள் மற்றும் எண்ணிக்கை கிடைக்காததால் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகியது.

இதனிடையே, திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து, கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவரது பரப்புரையை திருவாரூரில் இருந்து தொடங்கியுள்ளார். அதே போல, அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக என்டிஏ கூட்டணித் தலைவருமான இபிஎஸ், அக்கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர்களை அறிவிக்காத நிலையிலும் கூட, அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுவை புறப்பட்டு சென்றார்.

புதுவையில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை திரும்பி, இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.

இதைத் தொடர்ந்து, ஏப்.4 பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் பாஜக வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படாததால் நிர்வாகிகள் கூட்டத்தை மோடி ரத்து செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக மையக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிரணி தேசியத் தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.