உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் 19வது தொடரின் 11வது லீக் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். கோஹ்லி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அன்சுல் கம்போஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், பில் சால்ட் உடன் தேவ்தத் படிக்கல் இணை சேர்ந்து ரன் குவித்தனர்.

பில் சால்ட் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில், சிவம் துபேவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து, சிறப்பாக ஆடி 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசியிருந்த நிலையில், படிக்கல், ஜேமி ஓவர்டன் பந்தில் கிளீன் போல்டானார்.

கடைசி ஓவர்களில் டிம் டேவிட் (25 பந்து, 8 சிக்சர், 3 பவுண்டரி, 70 ரன்), ரஜத் படிதார் (19 பந்து, 6 சிக்சர், 1 பவுண்டரி, 48 ரன்) என சிஎஸ்கே வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து 36 பந்துகளில் 99 ரன்கள் குவித்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி, 3 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 251 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 43 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் (50), பிரசாந்த் வீர் (43), ஜேமி ஓவர்டன் (37) ரன்கள் எடுத்தனர்.

பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஜேக்கப் டஃபி , க்ருணால் பாண்டியா, அபிநந்தன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.