சாத்தான்குளம் வழக்கில் 9 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்தனர். கடந்த 2020ம் ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கடையை இரவில் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததாகக் கூறி, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக 2020 ஜூன் 19ம் தேதி, காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். அன்றிரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த […]
எத்தனை மத்திய அமைச்சர்கள் வந்தாலும் தமிழகத்தில் வெல்ல முடியாது: வைகோ சூளுரை

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி, சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களத்தில், இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று அதிமுகவில் இபிஎஸ், தேமுதிகவில் பிரேமலதா, பாமக அன்புமணி தரப்பில் சவுமியா அன்புமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள […]
இபிஎஸ், பிரேமலதா, சவுமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி சூடு பிடித்துள்ள அரசியல் தேர்தல் களத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். இதனிடையே, முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் […]
17 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் மம்மூட்டி இணைந்து நடித்த பேட்ரியாட் பட டிரெய்லர் வெளியீடு

மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டியும் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் ஆரம்ப கால கட்டடங்களில் பல படங்களில் இணைந்து நடித்தனர். அதன் பின்னர், இருவரும் மோலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்த பின் தனித்தனியாக பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். இதனிடையே, கடந்த 2008ம் ஆண்டு ஜோஷி இயக்கத்தில் வெளியான `டிவென்ட்டி:20′ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதில் சுரேஷ் கோபி, திலீப் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம், ஒரு கிரைம் […]
பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி பிறந்த தேதி சான்று கட்டாயம்

ஏப்ரல் 1, 2026 முதல் திருத்தப்பட்ட பான் விண்ணப்ப விதிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பான் விண்ணப்பச் செயல்முறையில் தற்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட படிவம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் முந்தைய படிவம் 49ஏ-க்கு பதிலாக படிவம் 93-ஐ நிரப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பிற நிறுவனங்கள் படிவம் 49ஏஏ-க்கு பதிலாக படிவம் 95-ஐ பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பான் விண்ணப்பத்திற்கு ஆதார் மட்டும் இனி போதாது. புதிய விதிகள் […]
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 குறைவு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலை கொண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து […]
தமிழக மாநிலங்களவை எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மே.வங்க மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப். 26ஆம் தொடங்கி மார்ச் 5ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை இடங்களில் 4 திமுகவிடம் இருந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒன்றும் தேமுதிகவுக்கு ஒன்றுமாக 2 மாநிலங்களவை தொகுதிகள் […]
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 10வது லீக் போட்டி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று, சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே நடந்தது. இதில் டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ரன் எடுக்காமல் அவுட்டானார். 3வது ஓவரில் ஹெட், 7 ரன்னில் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து 4வது […]
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 11வது லீக் போட்டி, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோஹ்லி களமிறங்கினர். கோஹ்லி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அன்சுல் கம்போஜ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், பில் சால்ட் உடன் தேவ்தத் படிக்கல் இணை சேர்ந்து ரன் குவித்தனர். பில் […]