உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 குறைவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 குறைவு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் நிலை கொண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன் தினம் அதிரடியாக சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று (ஏப்.5) சந்தை விடுமுறை நாள் என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமுமில்லை.

இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,810 க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம், சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ. 255-க்கும், கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.