உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

17 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் மம்மூட்டி இணைந்து நடித்த பேட்ரியாட் பட டிரெய்லர் வெளியீடு

17 ஆண்டுகளுக்கு பின் மோகன்லால் மம்மூட்டி இணைந்து நடித்த பேட்ரியாட் பட டிரெய்லர் வெளியீடு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்முட்டியும் சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் ஆரம்ப கால கட்டடங்களில் பல படங்களில் இணைந்து நடித்தனர்.

அதன் பின்னர், இருவரும் மோலிவுட்டில் உச்ச நட்சத்திரங்களாக உயர்ந்த பின் தனித்தனியாக பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 2008ம் ஆண்டு ஜோஷி இயக்கத்தில் வெளியான `டிவென்ட்டி:20′ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதில் சுரேஷ் கோபி, திலீப் உள்ளிட்ட மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.

இப்படம், ஒரு கிரைம் திரில்லராக பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, கேரளா மற்றும் வெளிமாநிலங்களிலும் பல திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் மலையாளத் திரைப்பட சங்கத்தின் நிதியுதவிக்காக எடுக்கப்பட்டதால், இதில் நடித்த கலைஞர்கள் அனைவரும் சம்பளம் வாங்காமல் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பிறகு, இணைந்து நடிக்காமல் இருந்த முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு பின் தற்போது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் `பேட்ரியாட்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியான நிலையில், இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா, ஷெரின், கிரேஸ் ஆண்டனி, டேனிஷ், இந்த்ரன்ஸ், ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.