தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மே.வங்க மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப். 26ஆம் தொடங்கி மார்ச் 5ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை இடங்களில் 4 திமுகவிடம் இருந்தது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒன்றும் தேமுதிகவுக்கு ஒன்றுமாக 2 மாநிலங்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் காங்கிரஸ் தரப்பில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிக தரப்பில் எல்.கே. சுதிஷ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 2 இடங்களில் திமுகவின் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.
மறுபுறம், அதிமுக தரப்பில் தம்பிதுரை, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது.
இதனிடையே, மாநிலங்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகினர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வான 6 மாநிலங்களவை எம்.பி.க்களும் பதவியேற்றனர். திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீச்சந்திரன், திருச்சி சிவா, தேமுதிகவைச் சேர்ந்த எல்.கே.சுதீஷ், அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மாநிலங்கவை உறுப்பினர்களாக பதவியேற்றனர். பதவியேற்ற எம்.பி.க்களுக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழில் வாழ்த்து கூறினார்.


