உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி ஆர்ஆர் அதிரடி வெற்றி

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி ஆர்ஆர் அதிரடி வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் 19வது தொடரின் 16வது லீக் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நேற்று நடந்தது. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

மழையின் காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீசியது. ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட், முதல் ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து தேவ்தத் படிக்கல், கோலி இணை 45 ரன் சேர்த்த நிலையில், படிக்கல் அவுட்டானார்.

கோலி 32 ரன், க்ருணால் பாண்டியா , ஜிதேஷ் சர்மா அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். டிம் டேவிட் 13 ரன், ஷெப்பர்ட் 22 ரன், அதிரடியாக ஆடிய பட்டிதார் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது.

ஆர்சிபி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், பிரிஜேஷ் சர்மா தலா 2, சந்தீப் சர்மா, ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்ததாக 202 ரன் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஹேசல்வுட் பந்தில் அவுட்டாக, அடுத்தடுத்து களமிறங்கிய ஹெட்மயர் டக் அவுட்டானார். ரியான் பராக் நிலைத்து ஆடவில்லை.

ராஜஸ்தான் அணியில் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 78 ரன் விளாசி அவுட்டானார். துருவ் ஜுரேல் 81 ரன், ஜடேஜா 24 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். ஹேசல்வுட், க்ருணால் பாண்டியா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 18 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 202 ரன் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஐபிஎல் 19வது தொடரில் ஆர்சிபி முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.