உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

பயணங்கள் உங்களை தன்னடக்கம் மிக்கவராக்கும் – மஞ்சு வாரியர்

பயணங்கள் உங்களை தன்னடக்கம் மிக்கவராக்கும் – மஞ்சு வாரியர்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

மலையாள திரையுலகில் கடந்த 1995ல் வெளியான சாக்‌ஷியம் படத்தின் மூலம் அறிமுகமாகி சல்லாபம், தூவல் கொட்டாரம், ஆறாம் தம்புரான், லூசிபர் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையானவர் மஞ்சு வாரியர்.

இவர் மலையாள சினிமாவின் உச்சத்தில் இருந்த போது, 1998ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2015ல் இருவரும் நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்றனர்.

தேசிய விருது, கேரளா மாநில அரசு விருது மற்றும் பல ஃபிலிம்பேர் விருதுகளையும் மஞ்சு வாரியர் வென்றுள்ளார்.

இவர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் அஜித்துடன் துணிவு, ரஜினியுடன் வேட்டையன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது ஆர்யா நடித்துள்ள `மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவரிடம், அஜித்துடன் பைக் பயணம் சென்ற புகைப்படத்தை காண்பித்து அந்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மஞ்சு, “ஆன் ஸ்க்ரீன் மட்டுமில்லாமல் ஆஃப் ஸ்க்ரீனிலும் இருக்கிற மறக்க முடியாத வாழ்க்கை அனுபவம் உள்ளது. வாழ்க்கை கண்ணோட்டத்தையும் வாழ்க்கை பற்றிய நிறைய வெளிப்பாடுகளும் நிறைந்த பயணம் அது. அந்த பயணம் முடிந்த பின்னர், லைசென்ஸ் வாங்கி, பைக்கும் வாங்கிவிட்டேன் என்றார்.

மேலும், பயணம் என்பது வாழ்க்கையில் எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று என சொல்ல விரும்புகிறேன். பயணம் என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது அல்ல. முதலில் வீட்டிலிருந்து வெளியே வாருங்கள். உங்களை சுற்றியுள்ள வாழ்க்கையை கவனியுங்கள்.

அந்த அனுபவங்கள் மூலம் உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினையெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள். அது உங்களை தன்னடக்கம் மிக்கவராக மாற்றும், சாந்தப்படுத்தும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.