மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படும்: ப.சிதம்பரம்

நாரி சக்தி வந்தன் அதினியம் என்று அழைக்கப்படும் அரசியலமைப்பு (106வது திருத்தம்) சட்டம், 2023ஐத் திருத்தும் 131வது அரசியல் சட்ட திருத்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீட்டை விரிவுபடுத்தும் மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன. வரும் 2029 பொதுத்தேர்தலில் இதனை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரை நாளை முதல் 3 நாட்கள் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் […]
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அசத்தல் வெற்றி

ஐபிஎல் 19வது தொடரின் 22வது லீக் போட்டியில் நேற்றிரவு சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே, கேகேஆர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்ய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் களமிறங்கினார். ருதுராஜ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும் அடுத்து ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். ஆயுஷ் மாத்ரே 38 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 48 […]
நாடாளுமன்றத்தில் மக்களவையின் பலத்தை 850 ஆக உயர்த்தும் மசோதா நாளை தாக்கல்

மக்களவை,மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக எம்பிக்களின் எண்ணிக்கையை 543 ல் இருந்து 850 ஆக உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யும் இத்திட்டத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 2023ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்நிலையில், வரும் 2029 பொதுத்தேர்தலில் இதனை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு, மே.வங்க […]
மேற்கு வங்க தேர்தலில் 2,926 வேட்பாளர்கள் போட்டி

மேற்கு வங்க சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அங்கு ஏப்.23 மற்றும் ஏப்.29 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கடந்த மாதம் 15ம் தேதி அறிவித்தார். இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் இருமுனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் […]
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒரு நாள் விலை குறைவதும் மறுநாள் முந்தைய நாளின் விலையை விட […]
தொகுதி மறுவரையறை விவகாரம் – திமுக எம்.பி.க்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

தொகுதி மறுவரையறை குறித்து, திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்காமல் மத்திய அரசு இதனை செயல்படுத்த முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால் தமிழ்நாடு முழு அளவிலான போராட்டத்தில் ஈடுபடும். பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டியிருக்கும். இதுவரை பார்க்காத தமிழ்நாட்டை மோடி பார்க்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார். இதைத்தொடர்ந்து, தொகுதி மறுவரையறை குறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி […]
தொகுதி மறுவரையறை: தமிழகமே தெருவில் இறங்கி போராடும் – முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

மத்திய அரசு தொகுதி மறுவரை செய்யும் நடவடிக்கை எடுத்தால், தமிழ்நாடு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சாதனைப்படுத்திய தமிழ்நாட்டிற்கு தொகுதி மறுவரை தண்டனையா? தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துள்ள பேராபத்தை தடுத்து நிறுத்துவோம். நாளை மறுநாள் நாடாளுமன்றம் வலுக்கட்டயமாக கூட்டப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருவதற்கே நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது. குடும்பக் கட்டுப்பாடு, மக்கள் தொகையை […]
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை

இந்திய அரசியலமைப்பின் தந்தையும், சிறந்த சட்டமேதையும், சமூக சீர்திருத்தவாதியுமான அண்ணல் அம்பேத்கர் தீண்டாமைக்கு எதிராகவும், பட்டியல் இன மக்களின் உரிமைக்காகவும் போராடியவர் ஆவார். சமூக நீதியை நிலைநாட்ட பாடுபட்ட மாபெரும் தலைவரான அவர், இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக, நவீன இந்தியாவின் சட்டக் கட்டமைப்பை உருவாக்கினார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14ம் தேதி தமிழ்நாடு அரசால் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. […]
பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்: புதிய முதல்வர் யார்?

பீகாரில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இதில், பாஜ 89, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 85, சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி ராம்விலாஸ் (எல்ஜேபிஆர்வி) 19, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா செக்குலர் (எச்ஏஎம்எஸ்) 5, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேஜ கூட்டணி மொத்தமாக 202 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பீகாரில் மீண்டும் […]
பாஜக தேர்தல் அறிக்கை – குடும்பத்து ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். தமிழ்நாடு சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் தேதி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக தலைமையிலான […]