உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கம் மற்றும் உலக பங்குச்சந்தை முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

சமீப காலமாக ஈரான் போர், உலக பொருளாதாரம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

கடந்த வாரம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஒரு நாள் விலை குறைவதும் மறுநாள் முந்தைய நாளின் விலையை விட அதிகரிப்பதுமாக இருந்து வந்தது. போதாக்குறைக்கு, காலையில் குறைவதும் மாலையில் விலை உயர்வதுமாக திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்வுகளுக்காக நகை வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200ம், கிராமுக்கு ரூ.25ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14,100 ஆக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை சந்தை விடுமுறை நாள் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி சனிக்கிழமை விலையில் விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான திங்களன்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, கிராம் ரூ.14,060க்கும் விற்பனையான நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,220 ஆக விற்பனையானது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,320க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265 ஆக விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.275க்கும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து காணப்படும் ஏற்ற, இறக்கம் அதன் நிலையற்றத்தன்மை தங்கத்தில் முதலீடு செய்பவர்களை மட்டுமின்றி, நகை வாங்கும் தேவையில் உள்ள நடுத்தர மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.