தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஹரிஷ் கல்யாண் ஒருவராவார். சிந்து சமவெளி திரைப்படத்தின் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். அவர் நடித்த `ப்யார் பிரேமா காதல்’ படம் பெரிய ஹிட்டானது.
அதன் பின், ‘தாராள பிரபு’ பார்க்கிங்',லப்பர் பந்து’ போன்ற படங்களின் கதாபாத்திரங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் தனக்கென ஓர் இடத்தையும் ரசிகர்கள் மனதில் பிடித்தார்.
ஹரிஷ் கல்யாண் கடந்த 2022ம் ஆண்டு நர்மதா உதயகுமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கடந்த மார்ச் 2ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
அப்போது ஹரிஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், என் அன்பான குடும்பத்தினர் அனைவருடனும் மிக இனிமையான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டு மகள் பிறந்த செய்தியை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்புத்தாண்டு தினமான இன்று தங்கள் மகளுக்கு கிரியா எனப் பெயர் சூட்டியுள்ளதாக ஹரிஷ் அவரது சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.
அதில், மனைவி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவரது குடும்பத்தினர் சார்பாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

