உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மலையாள சினிமாவில் யுவன் ஷங்கர் ராஜா அறிமுகம்

மலையாள சினிமாவில் யுவன் ஷங்கர் ராஜா அறிமுகம்

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா, 1996ம் ஆண்டில், அவரது 16வது வயதில், அரவிந்தன் படம் மூலம் அறிமுகமானார்.

யுவன் தமிழ்த் திரைப்படம் மற்றும் இசைத் துறையில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்தியவர். தமிழ்நாட்டில் “ரீ-மிக்ஸ்” கலாசாரத்தை தொடங்கி ஈஅதனை பிரபலபடுத்தியவர்.

அமீர் இயக்கத்தில் உருவான ராம் படத்தின் இசைக்காக 2006ம் ஆண்டில் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் யுவன்.

இவரது இசையில் வெளியான அரவிந்தன், பூவெல்லாம் கேட்டுப்பார், துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, தீனா, புதிய கீதை, சிலம்பாட்டம், மன்மதன், ராம், நந்தா, மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ஹிட் அடித்தன. இவரது இசைக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இப்போது வரை அவரது பல பாடல்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் சேஷூ' படத்தின் மூலம் 2002ல் அறிமுகமானார். பின்னர்7ஜி பிருந்தாவன் காலனி’, ஹேப்பி',பாஞ்சா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.

கன்னடத்தில் மதனா,கில்லி’, ஜாலி பாய்',அஜித்’ போன்ற படங்களுக்கும், இந்தியில் ஸ்டிரைக்கர்',ராஜா நட்வர்லால்’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

யுவன் தற்போது அவரது 29 ஆண்டு கால இசைப் பயணத்தில், ஜோஜு ஜார்ஜ் இயக்கி, எழுதி, நடிக்கும் 2வது படமான ‘பாரிபாடி’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாக உள்ளார். காவ்யா ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

இது 5 மொழிகளில் வெளியாகும் பான்-இந்தியா படமாக, கேரளா மற்றும் ஐரோப்பாவில் படமாக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.