உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

இயக்குநர் அட்லீ பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

இயக்குநர் அட்லீ பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

திருச்சி அந்தோணியார் தேவாலயத்தில் முழங்காலிட்டு சென்ற தவெக தலைவர் விஜய்

தமிழக தேர்தல் பிரசார நிறைவுக்கு பின் அமலுக்கு வரும் விதிமுறைகள்

வாக்களிக்க சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லீ. இவர் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

தனது முதல் படமாக ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, சந்தானம் நடிப்பில் இயக்கிய ராஜா ராணி படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக வலம் வரத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் படமே மக்கள் மத்தியில் அவருக்கு மாபெரும் வரவேற்பைப் பெற்று தந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய மெர்சல், தெறி, பிகில் என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட்டாகின.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்து, தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் இயக்குநர் அட்லீ.

இப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தான் ஒரு ஹிட் இயக்குநர் என்று நிரூபித்து விட்டார் அட்லீ. இந்த வெற்றிகளுக்கு மத்தியில் தந்தையாகியுள்ளார் இயக்குநர் அட்லீ.

கடந்த 2014ம் ஆண்டு தனது காதலி மற்றும் நடிகையுமான பிரியாவை கரம்பிடித்தார். இந்த தம்பதிக்கு கடந்த 2023ம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அட்லீ – பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதை அறிவித்துள்ள அட்லீ அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனது மகன் மீர் தங்கையை வரவேற்பது போன்ற பதிவாக அதனை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து அட்லீ – பிரியா தம்பதிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

திருச்சி அந்தோணியார் தேவாலயத்தில் முழங்காலிட்டு சென்ற தவெக தலைவர் விஜய்

தமிழக தேர்தல் பிரசார நிறைவுக்கு பின் அமலுக்கு வரும் விதிமுறைகள்

வாக்களிக்க சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – எகிறிய ஆம்னி பேருந்து கட்டணம்

© NewsTimeTN. All Rights Reserved.