உங்கள் பிசினஸ் 4 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைய வேண்டுமா?
Please Contact : 7603836167
Gold Price – Loading…
Silver Price: Loading...
Gold - ₹ 15,217 | Silver - ₹ 280
Petrol - ₹ 100.85 | Diesel - ₹ 92.43
Gold Price: Loading...
Silver Price: Loading...
Gold - ₹ 14872.30 | Silver - ₹ 296.84
Petrol - ₹ 101.06 | Diesel - ₹ 92.61

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

வகைகள்

சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை அணி முதலில் களமிறங்கியது.

டாஸ் வென்ற லக்னோ பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக விளையாடிய டி காக் (13), டானிஷ் (2) சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய நமன் திர் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்த நிலையில், பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதையடுத்து விளையாடிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா தலா 15 ரன்களில் அவுட்டாகினர். இதனிடையே களமிறங்கிய திலக் வர்மா 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று ஆட்டமிழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தார்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 199 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரபாடா 3 விக்கெட், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாய் சுதர்ஷன் ரன் எதுவும் எடுக்காமலும் சுப்மன் கில் 14, ஜோஸ் பட்லர் 5 ரன்கள் என சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 17 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில், சான்ட்னர் பந்து வீச்சில் நமன் திர் இடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இவரைத் தொடர்ந்து ஷாருக்கான் 13 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் அஷ்வனி குமார் 4, சான்ட்னர், கஸன்ஃபர் தலா 2, பும்ரா, ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

All

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் – கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகாவைச் சேர்ந்தவரை அமர்த்துவதா? – கனிமொழி எம்பி கடும் கண்டனம்

இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு – முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

© NewsTimeTN. All Rights Reserved.